மின் பாவனையாளர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள கோரிக்கை


மின்சார சபையின் நுகர்வோர் ஒருங்கிணைப்பு அதிகாரிகள் சங்கம் பொதுமக்களிடம் சில கோரிக்கைகளை முன்வைத்துள்ளது.

தற்போது ஏற்பட்டுள்ள கொரோனா தொற்று தாக்கம் காரணமாக இந்த கோரிக்கைகளை முன்வைப்பதாக அந்த சங்கம் அறிக்கை வெளியிட்டு இந்த தகவலை வெளியிட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

இதற்கமைய வீடுகளில் உள்ள மின்சார அளவீட்டு பெட்டியின் மானி தெளிவாக தெரியும்படி வைத்திருக்குமாறும், பட்டியலை வழங்க வரும் மின்மானி வாசிப்பாளர்களிடத்தின் அருகில்  செல்லாது மின்சார பட்டியலை பெற்றுக்கொள்ளுமாறும் கோரப்பட்டுள்ளது.

இது தொடர்பில் பொதுமக்கள் அதிக கவனம் செலுத்துமாறும் அந்த சங்கத்தால்  கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.


No comments: