நேற்றைய தினத்தில் அடையாளம் காணப்பட்ட கொரோனா தொற்றாளர்கள் பற்றிய விபரம்


நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளான 124 பேர் நேற்றைய தினத்தில் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

மினுவாங்கொடை கொத்தணியில் நேற்றைய தினம் 121 பேருக்கு கொரோனா தொற்றுறுதியானது.

அவர்களில் தனிமைப்படுத்தலில் இருந்த 87 பேருக்கும் தொற்றுறுதியானவர்களுடன் தொடர்புடைய 34 பேருக்கும் கொரோனா தொற்றுறுதியானதாக அரசாங்க தகவல் திணைக்களம் அறிவித்துள்ளது.

அத்துடன் குவைட்டில் இருந்து நாடு திரும்பிய இருவருக்கும்,ஓமானில் இருந்து நாடு திரும்பிய ஒருவருக்கும் நேற்றைய தினம் கொரோனா தொற்றுறுதியாகியுள்ளது.

இதன் அடிப்படையில், மினுவாங்கொடை ஆடைத் தொழிற்சாலையில் கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை  1307 ஆக அதிகரித்துள்ளது.

இந்த நிலையில், நாட்டில் கொரோனா தொற்று காரணமாக பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 4752 ஆக காணப்படுகிறது.

இதேவேளை, கொரோனா தொற்றில் இருந்து குணமடைந்தோரின் மொத்த எண்ணிக்க 3307 ஆக அதிகரித்துள்ளது.

மேலும்,1432 பேர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு தொடர்ந்தும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.


No comments: