சந்தைப்பகுதியை தவிர்ந்த அட்டன் - டிக்கோயா நகரம் வழமைக்கு திரும்பியது

பொகவந்தலாவ நிருபர் எஸ்.சதீஸ் 


சுயதனிமைப்படுத்தல் பிரதேசமாக அறிவிக்கப்பட்டிருந்த அட்டன் – டிக்கோயா நகரத்திலுள்ள, கொரோனா தொற்றாளர் அடையாளம் காணப்பட்ட மீன் சந்தைப்பகுதி , சைட் வீதியின் நுழைவாயில் பகுதி தவிர்ந்த ஏனைய பகுதிகள் இன்று முதல் வழமைக்கு திரும்பியுள்ளது .

கடந்த 25  ஆம் திகதி  அட்டன் மீன் விற்பனை நிலைய உரிமையாளர் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதியானதையடுத்து அட்டன் மார்கட் 14 நாட்களுக்கு சுயதனிமை  பகுதியாக அறிவிக்கப்பட்டது.

இந்நிலையில் குறித்த நபருடன்  தொடர்புடைய 10 பேருக்கு பி.சி.ஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டதன் மூலம் கொரோனா தொற்று அடையா காணப்பட்டு அனைவரும் சுயதனிமை நிலையத்திற்கு அழைத்து செல்லப்பட்டனர்.

குறித்த 10 பேருடன் தொடர்புடைய 400 பேர் வரையில் தத்தமது வீடுகளில் சுயதனிமைக்குற்படுத்தப்பட்டு, அதில் 40 பேருக்கு பி.சி.ஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டதில் அவர்களுக்கு கொரோன தொற்று இல்லை என அறிக்கை கிடைக்கப்பெற்ற நிலையிலே 31/10 இன்று அட்டன் டிக்கோய – நகர கடைகளை திறக்க பொது சுகாதார பரிசோதகர்களும் அட்டன் – டிக்கோயா நகரசபையும் நடவடிக்கை எடுத்தது.

எனினும் அட்டன் மார்கட் பகுதியிலுள்ள கடைகளை வர்த்தகர்கள் இன்று திறக்க முற்படுகையில் பொது சுகாதார பரிசோதகரினால் அதற்கு அனுமதி வழங்காததையடுத்து அங்கு முறுகல் நிலை ஏற்பட்டது  .

ஆயினும் தொடர்ந்து மார்கட் பகுதியை மூடுவதற்கு பொலிஸாரும் சுகாதார பரிசோதகர்களும் நடவடிக்கை எடுத்துள்ளதுடன்  ஏனைய வர்த்தக நிலையங்களை சுகாதார விதிமுறைகளுக்கு அமைய திறக்க அனுமதிக்கப்பட்டதுடன் அட்டன் -டிக்கோயா நகரசபையினால் நகருக்கு வரும் பஸ், வேண், மற்றும் முச்சக்கரவண்டிகளுக்கு கிருமி நாசினி தெளிக்கப்பட்டது.

கொரோன தொற்று மீண்டும் ஏற்படும் பட்சத்தில் அட்டன் – டிக்கோயா நகர வர்த்தக நிலையங்கள் மூடப்படும் எனவும் பொது சுகாதர பரிசோதகர் தெரிவித்தார்.




No comments: