பதுளை பிரதான நிலையத்தில் இருந்து தூர இடங்களுக்கு முன்னெடுக்கப்படும் இலங்கை போக்குவரத்து சபை பஸ் சேவைகள் மறு அறிவித்தல் வரை இடைநிறுத்த


பதுளை பிரதான பஸ் நிலையத்தில் இருந்து தூர இடங்களுக்கு முன்னெடுக்கப்படும் இலங்கை போக்குவரத்து சபை பஸ் சேவைகள் மறு அறிவித்தல் வரை இடைநிறுத்தப்பட்டுள்ளது.

கொரோனா தொற்று அச்சநிலைக்காரணமாக இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக பதுளை பிரதான பஸ் நிலைய பணிப்பாளர் குறிப்பிட்டார்.

இதன்படி, பதுளை பிரதான பஸ் நிலையத்திலிருந்து கொழும்பு, யாழ்ப்பாணம், காலி, பாணந்துறை, கண்டி, அலுத்கம, இரத்தினபுரி மற்றும் மட்டக்களப்பு ஆகிய இடங்களுக்கான பஸ் சேவைகளே இவ்வாறு இடைநிறுத்தப்பட்டுள்ளது.

No comments: