நாடு திரும்பிய இலங்கையர்கள்


கொரோனா  தொற்றுப் பரவல் காரணமாக கட்டாரில் சிக்கியிருந்த மேலும் 42 பேர் இன்று காலை நாட்டை வந்தடைந்துள்ளனர்.

நாடு திரும்பியவர்களை தனிமைபடுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக COVID – 19 தொற்று ஒழிப்பிற்கான தேசிய செயலணி தெரிவித்துள்ளது.

இதேவேளை, தனிமைப்படுத்தல் செயற்பாடுகளை நிறைவு செய்த 164 பேர் இன்று தங்களின் வீடுகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.

தனிமைப்படுத்தில் கண்காணிக்கும் நிலையங்களிலிருந்து இதுவரையான காலப்பகுதியில் 49,577 பேர் தனிமைப்படுத்தல் செயற்பாடுகளை நிறைவு செய்துள்ளனர்.

80 தனிமைப்படுத்தல் நிலையங்களில் 8,029 பேர் தனிமைப்படுத்தி கண்காணிக்கப்படுவதாக COVID – 19 தொற்று ஒழிப்பிற்கான தேசிய செயலணி தெரிவித்துள்ளது.

No comments: