அரச புலனாய்வு பிரிவில் பணியாற்றுவதாக கூறி மோசடிகளில் ஈடுபட்ட சந்தேக நபர் கைது


அரச புலனாய்வு பிரிவில் பணியாற்றுவதாக தெரிவித்து பொதுமக்களை தவறாக வழிநடாத்திய நபர் ஒருவர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

குறித்த நபர்  பொலிஸார் மற்றும்  பொதுமக்களை  வழிநடாத்தியுள்ள  குற்றச்சாட்டில் வெள்ளவத்தை பொலிஸாரினால் கைது செய்யப்பட்டிருந்தார்.

இந்த நிலையில் கைது செய்யப்பட்ட நபர் கல்கிஸ்ஸை நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டதைத் தொடர்ந்து குறித்த நபர் எதிர்வரும் 3 நாட்களுக்கு விளக்கமறியலில்  வைக்கப்பட்டுள்ளார்.

காலி பகுதியைச் சேர்ந்த 48 வயதுடைய நபர் ஒருவர் இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments: