நாட்டில் நேற்றைய தினம் அடையாளம் காணப்பட்ட கொரோனா தொற்றாளர்கள் பற்றிய தகவல்


திவுலபிட்டிய மற்றும் பேலியகொட கொரோனா கொத்தணியில் தொற்றாளர்களின் எண்ணிக்கை 5396 அதிகரித்துள்ளது.

நேற்றைய தினம் கொரோனா தொற்றாளர்கள் 457 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், திவுலபிட்டிய- பேலியகொட கொரோனா கொத்தணியில் நெருங்கிய தொடர்பு கொண்டிருந்த 447 பேர் மற்றும் தனிமைப்படுத்தப்பட்டுள்ள மத்திய நிலையத்தில் மேலும் 10 பேர் கொரோனா தொற்றாளர்களாக அடை யாளம் காணப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

அதன்படி, நாட்டில் கொரோனா தொற்றாளர்களின் மொத்த எண்ணிக்கை 8870 ஆக உயர்ந்துள்ளது.

தற்போது நாட்டின் 32 வைத்தியசாலைகளில் 4808 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

மேலும்,நாட்டில் கொரோனா தொற்றால் 4043 பேர் குணமடைந்து வைத்தியசாலையில் இருந்து வெளியேறியுள்ளதோடு,கொரோனா தொற்றால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 19 ஆக உயர்ந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments: