அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ள விடயம்


நாட்டில் தொடர்ந்தும் அபாயகரமான சூழ்நிலைத் நிலவிவருவதாக அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் குறிப்பிட்டுள்ளது.

மேலும், சமூக தொற்று பரவலுக்கான ஆரம்ப நிலையிலேயே நாடு தற்போது காணப்படுவதாகவும் அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.

அத்துடன், நாட்டில் கொரோனா தொற்றின் இரண்டாம் அலையில் அதிகளவானவர்கள் சமூக மட்டத்தில் இருந்தே அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கபட்டுள்ளது.

இந்த நிலையில், நாட்டில் சமூக மட்டத்தில் தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டால், சிகிச்சையளிப்பதில் பிரச்சினை ஏற்படும் எனவும்  அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் கூறியுள்ளது.

மேலும், அவசர பிரிவுகளில் நோயாளர்களுக்கு சிகிச்சையளிப்பதிலும் சிக்கல் நிலை ஏற்படுமெனவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இதேவேளை, இன்றைய சூழ்நிலையில் சரியான தீர்மானம் மேற்கொள்ளாத பட்சத்தில் நாட்டில் அதிக உயிரிழப்புகள் பதிவாகும் சாத்தியம் காணப்படுவதாகவும் அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் குறிப்பிட்டுள்ளது.

No comments: