உலகளவில் கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை


உலகளவில் கொரோனா  தொற்றிலிருந்து, இரண்டரை கோடி மக்கள் குணமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது..

அண்மைய உத்தியோகபூர்வ புள்ளிவிபரங்களின் படி, உலகளவில் இரண்டு கோடியே 54 இலட்சத்துக்கும் மேற்பட்டோர் வைரஸ் தொற்றிலிருந்து குணமடைந்துள்ளதாகவும்,மொத்தமாக கொரேனா தொற்றினால், மூன்று கோடியே 41 இலட்சத்து 56ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், பத்து இலட்சத்து 18ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கொரோனா தொற்றினால், உயிரிழந்துள்ளனர்.

உலகளவில் கொரோனா தொற்றினால் அதிக பாதிப்பை எதிர்கொண்ட முதல் நாடாக அமெரிக்கா காணப்படுவதோடு,அதற்கு அடுத்தப்படியாக, இந்தியா, பிரேஸில், ரஷ்யா மற்றும் கொலம்பியா ஆகிய நாடுகள் உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


No comments: