ஊரடங்கு குறித்து காவற்துறை ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ள விடயம்


மேல் மாகாணத்தில் 112 பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதியிலும் குளியாபிட்டியவில் 5 பொலிஸ் பிரிவிற்குட்பட நாடு முழுவதும் 117 பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதிகளில் ஊரடங்கு சட்டம் அமுல் படுத்தப்பட்டுள்ளது  என காவற்துறை ஊடகப் பேச்சாளர், பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.

மேல் மாகாணத்தில் நேற்று நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் ஊரடங்கு சட்டம் பிறப்பிக்கப்பட்டுள்ளது.

குறித்த ஊரடங்கு சட்டம் எதிர்வரும் நவம்பர் 2ம் திகதி திங்கட்கிழமை காலை 5 மணிவரை அமுலில் இருக்கும் என அவர்  தெரிவித்துள்ளார்.

அதன் படி கொழும்பு , கம்பஹா மற்றும் களுத்துறை மாவட்டத்திலுள்ள அனைத்து பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதிகளிலும், குருணாகல் மாவட்டத்தில் 5 பொலிஸ் பிரிவுகளிலும் ஊரடங்கு சட்டம் அமுலில் உள்ளது என அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.

நேற்று நள்ளிரவுக்கு முன்னர் ஊரடங்கு சட்டம் அமுலிலிருந்த 68 பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதிகளைத் தவிர ஏனைய பொலிஸ் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதிகளில் அமுல்படுத்தப்பட்ட ஊரடங்கு சட்டம் எதிர்வரும் திங்கட்கிழமை அதிகாலை 5 மணிக்கு ஊரடங்கு சட்டம் நீக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்ட காலத்தில் அத்தியாவசிய கடமைகளில் ஈடுபடுவோரைத் தவிர வேறு யாரும் மேல் மாகாணத்திற்குள் நுழையவோ வெளியேறவோ அனுமதிக்க மாட்டார்கள் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மேல் மாகாணத்தின் அனைத்து நுழைவாயில்களிலும் பொலிஸ் வீதித் தடைகள் அமைக்கப்பட்டுள்ளதாக அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.

No comments: