திருக்கோவிலில் இடி மின்னல் தாக்கி கணவன் மனைவி உயிரிழப்பு

கனகராசா சரவணன் 


அம்பாறை திருக்கோவில் சாகாமம் பகுதியில் சேனைப்பயிர் செய்கையில் ஈடுபட்டுக் கொண்டிருந்தவர்களின் மீது இடி மின்னல் தாக்கி  கணவன் மனைவி உயிரிழந்த சம்பவம் இன்று வெள்ளிக்கிழமை (30)  மாலை 6 மணிக்கு இடம்பெற்றுள்ளதாக திருக்கோவில் பொலிசார் தெரிவித்தனர்.

திருக்கோவில் விநாயகபுரம் பழைய தபாலக வீதியைச் சேர்ந்த 46 வயதுடைய 3 பிள்ளைகளின் பெற்றோரான யோகேஸ்வரன், ஜெயசுதா  ஆகிய கணவன் மனைவி பரிதாபகரமாக உயிரிழந்துள்ளனர். 

சாகாமம் தேசிய நீர் வடிகால் சபை தண்ணீர் தாங்கிக்கு அருகாமையில் உள்ள தமது காணியில் சேனைப்பயிர் செய்கையில் ஈடுபட்டுவந்தனர். இந்த நிலையில் வழைமைபோல காலையில் சென்று சேனைப்பயிர் செய்கையில் இடுபட்டுக் கொண்டிருந்த நிலையில் மாலை 6 மணிக்கு கனத்த மழையுடன் இடடிமின்னல் தாக்குதலில் கணவன் மனைவி உயிரிழந்துள்ளனர். 

இதனையடுத்து குறித்த இருவரது சடலமும் திருக்கோவில் ஆதார வைத்தியசாலையில் ஒப்படைக்ப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்தனர். 


No comments: