நாட்டின் இன்றைய வானிலை


ஊவா,கிழக்கு,வடமத்திய மற்றும் வடமேல் மாகாணங்களிலும் அம்பாந்தோட்டையிலும் பிற்பகல் 1.00 மணிக்கு பின்னர் இடைக்கிடையே மழையுடனான வானிலை தொடரும் என வளிடண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

மேலும் சில இடங்களில்,குறிப்பாக  ஊவா மாகாணம் அம்பாறை மாவட்டத்திலும் 50 மில்லிமீற்றருக்கு அதிகமாக கடுமையான மழைவீழ்ச்சி பதிவாகும் எனவும்,மேல்,சப்ரகமுவ ஆகிய மாகாணங்களிலும், காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் இடைக்கிடையே மழை பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் இடியுடன் மழை பெய்யும் பகுதிகளில் மக்கள் அவதானத்துடன் செயற்பட வேண்டும் எனவும் வளிமண்டலவியல் திணைக்களம் மக்களிடம் அறிவுறுத்தியுள்ளது.

No comments: