நாட்டில் நேற்றைய தினம் கொரோனா தொற்றுக்குள்ளானவர்கள் பற்றிய விபரம்


நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை 7 ஆயிரத்தை கடந்துள்ளது.

நாட்டில் அதிகூடிய கொரோனா தொற்றாளர்கள் நேற்றைய நாளில் பதிவு செய்யப்பட்டுள்ளதையடுத்து இந்த அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது.

நேற்றைய நாளில் மாத்திரம் 865 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதன்படி நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை 7153 ஆக அதிகரித்துள்ளது.

இவர்களுள் பேலியகொடை மீன் சந்தை பணியாளர்களிடம் மேற்கொள்ளப்பட்ட பரிசோதனைகளில் நேற்று 535 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

அத்துடன் மினுவங்கொடை மற்றும் பேலியகொட கொரோனா தொற்றாளர்களுடன் நெருங்கிய தொடர்பை பேணிய 217 பேருக்கும் இவ்வாறு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

அத்துடன் காலி மீன்பிடி துறைமுகத்தில் 05 பேரும் பேருவளை மீன் பிடித்துறைமுகத்தில் 20 பேரும் மேலும் அவர்களுடன் தொடர்புடைய 40 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

நாடாளாவிய ரீதியில் கொரோனா தொற்றுக்குள்ளான 3682 பேர்  தற்போது நாடு முழுவதும் உள்ள 23 கொரோனா தொற்றுக்கான வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

அத்துடன் நாட்டில் இதுவரை கொரோனா தொற்றுக்குள்ளான  3644 பேர் குணமடைந்துள்ளதுடன் 14 உயிரிழப்புக்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன.No comments: