அதிக விலைக்கு அரிசியினை விற்பனை செய்த வர்த்தகர்களுக்கு எதிராக வழக்குத்தாக்கல்


புத்தளம் மாவட்டத்தின் பல பகுதிகளிலும் அதிக விலைக்கு விற்பனை செய்த 70 வர்த்தகர்களுக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

நுகர்வோர் அதிகார சபையினால் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கையை தொடர்ந்து இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்படவுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

கடந்த 2 மாதங்களாக குறித்த அதிகாரிகளினால்  இவ்வாறு சட்ட நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும்,குறித்த குற்றச்சாட்டின் கீழ் 300க்கும் அதிகமான சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments: