பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் வெளியிட்டுள்ள செய்தி


கல்வி பொது தராதர உயர்தர பரீட்சை  மற்றும் 5ம் தர புலமைப்பரிசில் பரீட்சை என்பவற்றை பிற்போடுவது தொடர்பில் இதுவரையில் எவ்வித தீர்மானமும் மேற்கொள்ளப்படவில்லை என பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.

கடந்த ஆகஸ்ட் மாதம் இடம்பெறவிருந்த குறித்த இரண்டு பரீட்சைகளும் பிற்போடப்பட்டுள்ளன.

கல்வி பொது தராதர உயர்தர பரீட்சையை எதிர்வரும் 12ம் திகதியும், 5ம் தர புலமைப்பரிசில் பரீட்சையை எரதிர்வரும் 11ம் திகதியும் நடத்துவதற்கு முன்னதாக தீர்மானிக்கப்பட்டிருந்தமைக் குறிப்பிடத்தக்கது.

No comments: