அரசாங்கத்தின் கட்டளையை மீறி மேலதிக வகுப்பு கற்றல் நடவடிக்கையினை மேற்கொண்ட அனைவரையும் வெளிநடப்பு செய்த பொலிஸார்

பொகவந்தலாவ நிருபர் எஸ் சதீஸ் 


நாட்டில் மீண்டும் ஏற்பட்டுள்ள கொரோனா தொற்று பரவியுள்ள நிலையில் நாட்டில் உள்ள அனைத்து பாடசாலகளுக்கும் விடுமுறை வழங்கப்பட்டுள்ள நிலையில் பொகவந்தலாவ பகுதியில் உள்ள பாடசாலை ஒன்றில் தரம் 05ல் கல்வி பயிலும் மாணவர்களுக்கு பாடசாலை மண்டபம் ஒன்றில் மேலதிக வகுப்புகளில் கற்றல் நடவடிக்கையில் ஈடுபட்டு வந்த நூற்றுக்கும் மேற்பட்ட மாணவர்கள் வகுப்பறையில் இருந்து வெளியேற்றபட்டதோடு பொகவந்தலாவ சிறிபுர மற்றும் ஆறியபுற பகுதியில் உயர் தர மாணவர்களும் அங்கிருந்து வெளியேற்றபட்டதாக பொகவந்தலாவ பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த சம்பவம் 09.10.2020.வெள்ளிக்கிழமை காலை 10.00 மணியளவில் இடம் பெற்றது. 


நாட்டில் ஏற்பட்டுள்ள கொரோனா தொற்று காரணமாக நாட்டில் உள்ள அனைத்து பாடசாலைகளுக்கும் கல்வி அமைச்சினால் விடுமுறை வழங்கப்பட்டது. 

மத்திய மாகாணத்தில் உள்ள பாடசாலை மாணவர்களுக்கு எவ்வித மேலதிக வகுப்புகளையுமா் நடாத்த கூடாது என மத்திய மாகாண ஆளுனர் லலித் யூ கமகேவினால் நேற்றய தினம் உத்தரவு  பிறப்பிக்கப்பட்டது. ஆளுனரின் பணிப்புரையும் மீறி ஹட்டன் கல்வி வலையத்திற்குட்பட்ட அநேகமான பாடசாலைகளில் இது போன்ற மேலதிக வகுப்புகள் நடாத்தப்பட்டு வருவதாக தெரிவிக்கபடுகிறது.

இதேவேளை கொரோனா தொடர்பில் பொகவந்தலாவ வர்த்தகநிலையங்கள் முச்சக்கர வண்டி சாரதிகள் மற்றும் பேருந்துகளுக்கு பொகவந்தலாவ பொலிஸார் சுகாதார முறைமை தொடர்பில் தெளிவூட்ப்பட்டமைக் குறிப்பிடத்தக்கது.


No comments: