இலங்கையில் ஐந்தாயிரத்தை கடந்த கொரோனா தொற்றாளர்கள்


இலங்கையில் கொரோனா தொற்றுறுதியானவர்களின் எண்ணிக்கை 5000 ஐ கடந்துள்ளது.

நாட்டில் நேற்றைய தினத்தில் மாத்திரம் மினுவாங்கொடை பிரெண்டிக்ஸ் ஆடைத் தொழிற்சாலையில் 194 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

அவர்களில் 80 பேர் தனிமைப்படுத்தல் நிலையங்களில் அடையாளங்காணப்பட்டதுடன்,ஏனைய 114 பேரும் அவர்களுடன் தொடர்பைப் பேணியவர்கள் என் தெரிலிக்கப்பட்டுள்ளது.

இதன்படி மினுவாங்கொடை கொத்தணியில் கொரோனா தொற்றுக்குள்ளானவர்களின் மொத்த எண்ணிக்கை 1591 ஆக உயர்வடைந்துள்ளது.

இலங்கையில் கொரோனா தொற்றுறுதியானவர்களின் மொத்த எண்ணிக்கை 5038 ஆக அதிகரித்துள்ளது.

இதேவேளை,கொரோனா தொற்றுக்குள்ளாகி குணமடைநதவர்களின் எண்ணிக்கை 3328 ஆக காணப்படுகிறது.

அதேநேரம்,யாழ்ப்பாணத்தின் இயக்கச்சி தனிமைப்படுத்தல் நிலையத்தில் தனிமைப்பட்டிருந்த 9 பேருக்கு கொரோனா தொற்றுறுதியானதாக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் மருத்துவ பணிப்பாளர் த.சத்திய மூர்த்தி தெரிவித்துள்ளார்.

இதேவேளை, யாழ்ப்பாணத்தில் 285 பேருக்கு கொரோனா பரிசோதனைகள் யாழ் போதனா வைத்தியசாலை ஆய்வுகூடத்தில் நேற்று மேற்கொள்ளப்பட்டன.

இந்த நிலையில், ஏனைய 276 பேருக்கும் கொரோனா தொற்று இல்லை என உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் மருத்துவர் த.சத்திய மூர்த்தி தெரிவித்தார்.

இதேவேளை கொரோனா தொற்றுறுதியானவர்களையும் அவர்களுடன் தொடர்பைப் பேணியவர்களையும் தனிமைப்படுத்தும் செயற்பாட்டை தொடர்ந்தும் முன்னெடுக்கவுள்ளதாக இராணுவ தளபதி லெப்டினன் ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

No comments: