மோட்டார் வாகனத் திணைக்களத்தின் பணிகள் நாளை மீண்டும் ஆரம்பம்


நாட்டில் ஏற்பட்டுள்ள கொரோனா அச்சுறுத்தல் காரணமாக, சாரதி அனுமதிப்பத்திரங்களின் செல்லுபடியாகும் காலத்தை நீடிப்பதற்கான வர்த்தமானி  நாளை வெளியிடப்படவுள்ளது.

இதன்படி, சாரதி அனுமதிப்பத்திரம் காலாவதியாகும் திகதியிலிருந்து, மேலும் 3 மாத காலத்திற்கு செல்லுபடியாகும் வகையில், குறித்த வர்த்தமானி வெளியாகவுள்ளதாக மோட்டார் வாகன கைத்தொழில் இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம தெரிவித்துள்ளார்.

இதேவேளை, மோட்டார் வாகனத் திணைக்களத்தின் பணிகள் நாளை மீண்டும் ஆரம்பிக்கப்படவுள்ளன.

இதற்கமைய, சேவைகளைப் பெற்றுக்கொள்ள விரும்புவோர்,  திணைக்களத்தைத் தொடர்பு கொண்டு தமக்கான நேரத்தை ஒதுக்கிக் கொள்ளுமாறு அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.

எனினும் வேரஹர அலுவலகத்தில் முன்னெடுக்கப்படும் சாரதி அனுமதிப்பத்திரம் வழங்கும் ஒருநாள் சேவை, மறு அறிவித்தல் வரை இடைநிறுத்தப்பட்டுள்ளதாக  மோட்டார் வாகன கைத்தொழில் இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம மேலும் குறிப்பிட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments: