கல்முனை வடக்கில் மனைப்பொருளாதார வேலைத்திட்டத்தின் அங்குராப்பண நிகழ்வு

 செ.துஜியந்தன்


வறுமை ஒழிப்பு வாரத்தை முன்னிட்டு ஜனாதிபதியின் மனைப்பொருளாதார அலகு அபிவிருத்தி வேத்திட்டத்தின் அங்குராப்பண நிகழ்வு  இன்று  (20) கல்முனை வடக்கு பிரதேச செயலகத்தின் சமுர்த்தி பிரிவினரால்  பெரிய நீலாவணை கிராமத்தில் நடைபெற்றது. 

கல்முனை வடக்கு பிரதேச செயலகத்தின் பிரதேச செயலாளர் ரி.ஜே.அதிசயராஜ் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் கல்முனை வடக்கு சமுர்த்தி தலைமைப்பீட முகாமையாளர் கே.இதயராஜ், சமுர்த்தி திட்ட  முகாமையாளர் ஏ.எல்.நஜீப், சமுர்த்தி வங்கி முகாமையாளர் தவசீலன். பெரியநீலாவணை சமுர்த்தி அபிவிருத்தி  உத்தியோகத்தர் ஆர்.சந்திரகுமார்உட்பட கிராம உத்தியோகத்தர்கள், பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தர்கள், சமுர்த்தி பயனாளிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர். 

கல்முனை வடக்கு தமிழ் பிரதேச செயலகப்பிரிவிலுள்ள கல்முனை, பாண்டிருப்பு, பெரிய நீலாவணை, துரைவந்திய மேடு, சேனைக்குடியிருப்பு,நற்பிட்டிமுனை,ஆகிய கிராமங்களை உள்ளடக்கிய 29கிராம சேவகர் பிரிவுகளிலும் தெரிவு செய்யப்பட்ட   50 பயனாளிகளுக்கு பயனுள்ள கத்தரி,மிளகாய், கறிமிளகாய்,தக்காளி போன்ற நாற்றுகள் வழங்கி வைக்கப்பட்டன. 

இதன்முலம் கல்முனை வடக்கில் 1450 மனைப்பொருளாதார தோட்டங்கள் உற்பத்தி செய்யப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது. 


No comments: