நேற்றைய தினம் கொரோனா தொற்றுக்குள்ளானவர்கள் பற்றிய விபரம்


நாட்டில்  நேற்றைய தினத்தில் 7 பேர் கொரோனா  தொற்றுக்குள்ளானவர்களாக அடையாளம் காணப்பட்டதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

உக்ரைன் நாட்டைச் சேர்ந்த கடலோடி ஒருவருக்கும்,, சவூதி அரேபியாவில்  இருந்து நாடு திரும்பிய ஒருவருக்கும்,ஐக்கிய அரபு இராச்சியத்தில் இருந்து வருகைத் தந்த கடலோடி ஒருவருக்கும்,ஐக்கிய அரபு இராச்சியத்தில் இருந்து நாடு திரும்பிய 2 இலங்கையர்களுக்கும் மற்றும் திவுலபிட்டிய பெண் ஒருவருக்கும் அவரது 16 வயதுடைய மகளுக்கும்  நேற்றைய தினம் கொரோனா தொற்றுறுதியானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன்,நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளானவர்களின் மொத்த எண்ணிக்கை 3402 ஆக அதிகரித்துள்ளது.

இதேவேளை, கொரோனா தொற்றில் இருந்து பூரணமாக குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 3258  ஆக அதிகரித்துள்ளது.

மேலும் 131 கொரோனா தொற்றாளர்கள் தொடர்ந்தும் வைத்தியசாலைகளில் சிகிச்சைப் பெற்று வருகின்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


No comments: