நுவரெலிய மாவட்டத்தை அபிவிருத்தி செய்வது தொடர்பிலான கலந்துரையாடல்


சௌபாக்கிய நோக்கு திட்டத்தின் கீழ் நுவரெலிய மாவட்டத்தை அபிவிருத்தி செய்வது தொடர்பிலான கலந்துரையாடலொன்று பிரதமர் மஹிந்த ராஜபக்ஸ தலைமையில் இடம்பெற்றுள்ளது.

நாடாளுமன்ற கட்டடத் தொகுதி வளாகத்தில் இந்த சந்திப்பு இடம்பெற்றுள்ளதாக பிரதமர் ஊடகப் பிரிவு தெரிவிக்கின்றது.

இதன் போது நுவரெலிய நகரம் மற்றும் அதனை சூழவுள்ள பகுதிகளை தேசிய மற்றும் வௌிநாட்டு சுற்றுலாப் பயணிகளுக்கு ஏற்ற நகரமாக மாற்றுவது தொடர்பிலும் இதன் போது அவதானம் செலுத்தப்பட்டுள்ளது.

மேலும் இதன்போது ஹட்டன் நகரத்தின் அபிவிருத்தி தொடர்பிலும் விசேட கவனம் செலுத்தப்பட்டுள்ளது.

ஹட்டன் நகர் முதல் தலவாக்கலை மற்றும் சிவனொளிபாதமலை வரையான பகுதியில் சுற்றுலா வசதிகளை அபிவிருத்தி செய்வதற்கும் பிரதமர் வலியுறுத்தியுள்ளார்.

அத்துடன் இராஜாங்க அமைச்சர் ஜீவன் தொண்டமானின் கோரிக்கைக்கு அமைய ஹட்டன் நகரிலுள்ள 3 ஆயிரம் குடிசை வீடுகளை அகற்றி அவர்களுக்கு புதிய வீடுகளை வழங்கும் திட்டமொன்று குறித்தும் அவதானம் செலுத்தப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

No comments: