நாட்டில் நேற்றைய தினம் கொரோனா தொற்றுக்குள்ளானவர்கள் பற்றிய விபரம்


நாட்டில் நேற்றைய தினம் 180 பேருக்கு கொரோனா தொற்றுறுதியாகியுள்ளது.

அவர்கள் 120 பேர் மினுவாங்கொடை பிரெண்டிக்ஸ் கொத்தணியைச் சேர்ந்தவர்கள் என இராணுவ தளபதி லெப்டினன் ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார். 

அவர்களில் 37 பேர் தனிமைப்படுத்தல் நிலையங்களில் அடையாளங்காணப்பட்டதுடன்,ஏனைய 83 பேர் அவர்களுடன் தொடர்பைப் பேணியவர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மினுவாங்கொடை கொத்தணிப் பரவலுடன் தொடர்புடைய கொரோனா தொற்றாளர்கள எண்ணிக்கை 2342 ஆக அதிகரித்துள்ளது.

அத்துடன் 35 பேர் கட்டுநாயக்க ஆடைத் தொழிற்சாலையின் பணியாளர்கள் எனவும்,25 பேர் அவர்களுடன் தொடர்புடையவர்கள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் கொழும்பு கோட்டை காவல்நிலைய காவற்துறை பரிசோதகர் ஒருவருக்கு கொரோனா தொற்றுறுதி செய்யப்பட்டுள்ளது.

இதற்கமைய அவருடன் தொடர்பினை பேணியவர்கள் பற்றிய தகவல்கள் சேகரிக்கப்பட்டு வருவதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதெவேளை கொழும்பு கப்பல் தளத்தில் அடையாளம் காணப்பட்ட கொரோனா தொற்றுறுதியானவர்களின் எண்ணிக்கை 21 ஆக அதிகரித்துள்ளது.

இதேவேளை, நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளானவர்களின் மொத்த எண்ணிக்கை 5805 ஆக உயர்வடைந்துள்ளதுடன் 2335 தொற்றாளர்கள் தற்போது நாடு முழுவதுமுள்ள 21 வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

அத்துடன் நாட்டில் இதுவரை கொரோனா தொற்றுக்குள்ளான 3457 பேர் குணமடைந்தும் 13 பேர் உயிரிழந்துமுள்ளனர்.


No comments: