பல்கலைக்கழக மானியங்கள் வெளியிட்டுள்ள செய்தி


பல்கலைக்கழக பரீட்சைகளை ஒன்லைன் ஊடாக நடத்துவது குறித்து அவதானம் செலுத்தப்பட்டுள்ளதாக பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் தலைவர் பேராசிரியர் கம்பத் அமரதுங்க தெரிவித்துள்ளார்.

கொரோனா தொற்றுக் காரணமாக பல்கலைக்கழக மாணவர்களின் கற்றல் செயற்பாடு மற்றும் பரீட்சைகளை இடையூறின்றி மேற்கொள்ளும் நோக்கில் இந்நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

இது தொடர்பில் பல்கலைக்கழக உபவேந்தர்கள்,விரிவுரையாளர்களை தெளிவுப்படுத்தும் மற்றும் அதற்கான வேலைத்திட்டத்தை ஆரம்பிப்பதற்குத் தேவையான ஆலோசனைகள் வழங்கப்படவுள்ளதாக பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் தலைவர் பேராசிரியர் கம்பத் அமரதுங்க தெரிவித்துள்ளார்.


No comments: