மதுவரித் திணைக்களத்தை மறுசீரமைப்பதற்கு இணைக்குழுவை நியமிக்க பிரதமர் அழைப்பு


இலங்கையில் மதுவரித் திணைக்களத்தை மறுசீரமைப்பதற்கு இணைக்குழுவை நியமிக்க பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ அழைப்பு விடுத்துள்ளார்.

மதுவரித் திணைக்கள அதிகாரிகள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் தொடர்பில் விவாதிக்க தொழிற்சங்க பிரதிநிதிகளுடன் நேற்றைய தினம் அலரிமாளிகையில் நடைபெற்ற கலந்துரையாடலின் போதே பிரதமர் இதனைத் தெரிவித்தார்.

மதுவரித் திணைக்கள அதிகாரிகளுடன்  தொழிற்சார் பிரச்சினைகள் குறித்து பிரதமர் கவனம் செலுத்தியதுடன் அரசியல் அழுத்தம் காரணமாக மதுவரித் திணைக்கள அதிகாரிகளின் இடமாற்றங்களை உடனடியாக நிறுத்தவும் தகுதியான அதிகாரிகளை மட்டும் இடமாற்றம் செய்யவும் பிரதமர் இதன்போது அறிவுறுத்தியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


No comments: