கல்வி அமைச்சு விடுத்துள்ள விசேட அறிவிப்பு


இந்த வருடம் க.பொ.த உயரதரம் மற்றும் 5ம் ஆண்டு புலமைப் பரிசில் பரீட்சைக்களுக்கு தோற்றவுள்ள பரீட்சார்த்திகள் தங்களது தகவல்களை கல்வி அமைச்சின் இணைய பக்கத்தில் உள்ளிடுமாறு கோரப்பட்டுள்ளது.

இதற்கமைய பரீட்சார்த்திகள் தங்களது தரவுகளை WWW.INFO.MOE.GOV.LK  என்ற இணையப் பக்கத்தில் பதிவிட முடியும் என கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.

இணையம் மூலமாக தகவல்களை வழங்க முடியாத பரீட்சார்த்திகள் பரீட்சைக்குத் தோற்றவுள்ள மத்திய நிலையங்களில் தங்களது தகவல்களை வழங்க முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாட்டில் கொரோனா தொற்றுப் பரவும் நிலையில் பாதுகாப்பு நடவடிக்கைகளுக்காக இவ்வாறு தகவல்கள் சேகரிக்கப்படுவதாக கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.

No comments: