முகக்கவசம் அணிவது தொடர்பில் வெளியான முக்கிய செய்தி


மக்கள் முகக்கவசங்களை 4 மணி நேரத்திற்கு மாற்ற வேண்டும் என கொழும்பு தேசிய வைத்தியசாலையின் பிரதான தாதி அதிகாரி புஸ்பா ரம்யானி சொய்சா அறிவுறுத்தியுள்ளார்.

உலக சுகாதார ஸ்தாபனத்தின் அறிவுறுத்தலுக்கமைய அவர் இந்த தகவலை வெளியிட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

அதேநேரம் கொரோனா தொற்றுப் பரவல் அச்சுறுத்தல் இல்லாத இடங்களில் வசிப்பவர்கள் மாத்திரம் துணியால் செய்யப்பட்ட முகக்கவசங்களை அணியலாம் என்றும்,ஏனையோர் விசேடமாக தயாரிக்கப்பட்ட முகக்கவசங்களையே அணிய வேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.


No comments: