சப்ரிகம வேலைத்திட்டத்தில் வீதி புனரமைப்பு பணிகள்

 செ.துஜியந்தன்  


ஜனாதிபதியின் சப்ரிகம துரித வேலைத்திட்டத்தின் கீழ் ஒவ்வொரு கிராம சேவகர் பிரிவுகளிலும் இரண்டு மில்லியன் ரூபா செலவில் வீதி, வடிகான் புனரமைப்பு வேலைகள் நடைபெற்றுவருகின்றன.

இதற்கமைய மண்முனை தென் எருவில் பற்று பிரதேசத்தில் தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியினால் அரசின் சப்பரிக வேலைத்திட்டங்கள் துரிதமாக நடைபெற்றுவருகின்றது.

தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் மண்மனை தென் எருவில் பற்று பிரதேச சபை உறுப்பினர் ரி.சுதாகரன் தலைமையில் கோட்டைக்கல்லாறு நடேசபதி வீதிக்கான புனரமைப்பு பணிகள் உத்தியோக பூர்வமாக ஆரம்பித்து வைக்கப்பட்டது. 

இந் நகிழ்வில் தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் ஆதரவாளர்கள், பிரமுகர்கள் எனப்பலர் கலந்து கொண்டனர்.

இவ் வீதியானது ஒரு மில்லியன் ரூபா செலவில் புனரமைப்பு செய்யப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது..

No comments: