அம்பாறையில் உங்களுக்கு வீடு நாட்டுக்கு எதிர்காலம் பயனாளிகளுக்கு காசோலைகள் வழங்கிவைப்பு

செ.துஜியந்தன்


அம்பாறை மாவட்டத்தில் உங்களுக்கு வீடு நாட்டுக்கு எதிர்காலம் வீடமைப்பு திட்டத்தில் நான்காம் கட்டமாக தெரிவு செய்யப்பட்ட ஐம்பது பயனாளிகளுக்கு முதற்கட்டமாக ஒரு இலட்சம் ரூபா பெறுமதியான காசோலைகள் வழங்கி வைக்கும் நிகழ்வு இன்று (06) அம்பாறை தேசியவீடமைப்பு அதிகாரசபையின் அலுவலகத்தில் மாவட்ட முகாமையாளர் ஏ.பி.ஜெயராங்கனி தலைமையில் நடைபெற்றது.

ஜனாதிபதியின் எண்ணக்கருவில் உருவான உங்களுக்கு எதிர்காலம் நாட்டுக்கு எதிர்காலம் எனும் தொனிப்பொருளில் தேசியவீடமைப்பு அதிகாரசபை நாடுமுழுவதும் ஏழைகளுக்கான வீடமைப்பு திட்டத்தை முன்னெடுத்துவருகின்றன.

இதற்கமைய அம்பாறை மாவட்டத்தில் நான்காம் கட்டமாக தெரிவு செய்யப்பட்ட பயனாளிகளுக்கு வீடமைப்ப திட்டம் ஆரம்பாமகியுள்ளது. இங்கு  கருத்து தெரிவித்த வீடமைப்பு அதிகாரசபையின் மாவட்ட முகாமையாளர் ஏ.பி.ஜெயராங்கனி உலக குடியிருப்பு தினம் அனுஷ்டிக்கப்பட்டுவரும் இக்காலப்பகுதியில் வீடு இல்லாத குறைபாட்டை நிவர்த்திக்க ஜனாதிபதியின் எண்ணக்கருவில் உருவான உங்களுக்கு வீடு நாட்டுக்கு எதிர்காலம் எனும் இத்திட்டம் வறிய மக்களின் வீடில்லாத கனவை நனவாக்கியுள்ளதாக தெரிவித்தார்.

இந்நிகழ்வில் அம்பாறை மாவட்ட தேசியவீடமைப்பு அதிகார சபையின் நிர்வாக உத்தியோகத்தர், அபிவிருத்தி முகாமையாளர், பொறியியலாளர், தொழிநுட்ப உத்தியோகத்தர்கள், பயனாளிகள் எனப்பலர் கலந்து கொண்டனர்.

No comments: