ஊரடங்கு அமுல்படுத்தப்பட்டுள்ள பகுதிகளுக்கான முக்கிய அறிவிப்பு


தனிமைப்படுத்தல் ஊரடங்கு அமுல்படுத்தப்பட்டுள்ள கம்பஹா மற்றும் களுத்துறை மாவட்டங்களில் அத்தியாவசிய பொருள் விற்பனை நிலையங்கள் மற்றும் மருந்தகங்களைத் திறக்க விசேட தினங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.

இதன்படி, திங்கட்கிழமை மற்றும் வியாழக்கிழமை ஆகிய நாட்களில் குறித்த விற்பனை நிலையங்களை திறக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், தனிமைப்படுத்தல் ஊரடங்கு அமுல்படுத்தப்பட்டுள்ள கொழும்பு மற்றும் குருணாகலை மாவட்டங்களில் செவ்வாய்க்கிழமை மற்றும் வெள்ளிக்கிழமை ஆகிய தினங்களில் குறித்த விற்பனை நிலையங்களை திறக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

இதேவேளை, காலை 8 மணி முதல் இரவு 10 மணிவரை குறித்த விற்பனை நிலையங்களை திறக்க முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments: