மீண்டும் திறக்கப்பட்ட கொழும்பு – கோட்டை பொலிஸ் நிலையம்


மூடப்பட்டிருந்த கொழும்பு –  கோட்டை பொலிஸ் நிலையம் மீண்டும் திறக்கப்பட்டுள்ளது.

கொழும்பு – கோட்டை பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் அதிகாரி ஒருவருக்கு நேற்றைய தினம் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதையடுத்து, குறித்த பொலிஸ் நிலையம் தற்காலிகமாக மூடப்பட்டிருந்தது.

இந்த நிலையில், இன்றைய தினம் கிருமி நீக்கம் செய்யும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ள நிலையில், வேறு பொலிஸ் நிலைய அதிகாரிகள் அழைத்துவரப்பட்டு, கோட்டை பொலிஸ் நிலையத்தின் நாளாந்த அலுவல்கள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments: