ஊரடங்கு உத்தரவை மீறிய குற்றச்சாட்டில் பலர் கைது


கம்பஹா மாவட்டத்தில் பொலிஸ் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ள பகுதிகளில், நேற்றைய தினத்தில் மாத்திரம் ஊரடங்கு உத்தரவை மீறி செயற்பட்ட குற்றச்சாட்டில் மேலும் 37 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளரான பிரதிப் பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண குறிப்பிட்டுள்ளார்.

இதன்படி, இதுவரையான காலப்பகுதியில் மொத்தமாக 302 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.


No comments: