தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்படாத பகுதிகளில் வசிப்போருக்கான அறிவிப்பு


தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்படாத பகுதிகளில் வசிப்போர் கொரோனா தடுப்பு சுகாதார விதிமுறைகளை தொடர்ந்தும் பின்பற்றுமாறு பிரதிப் பொலிஸ் மா அதிபர் வலியுறுத்தியுள்ளார்.

நாடளாவிய ரீதியில் 49 பொலிஸ் பிரிவுகளுக்குட்பட்ட பகுதிகளில் தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டம் தொடர்ந்தும் அமுலில் உள்ளதாக பிரதிப் பொலிஸ்  ஊடகப் பேச்சாளர் பிரதிப்  பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.

கொழும்பில் இன்று ஊடகங்களுக்கு கருத்துரைக்கையில் அவர் இதனை கூறியுள்ளார்.

கம்பஹா மாவட்டத்தின் 33 பொலிஸ் பிரிவுகளுக்குட்பட்ட பகுதிகள், குளியாப்பிட்டி பகுதியின் 5 பொலிஸ் பிரிவுகளுக்குட்பட்ட பகுதிகள் கொழும்பு நகரின் 8 பொலிஸ் பிரிவுகளுக்குட்பட்ட பகுதிகள் மற்றும் களுத்துறை பிரதேசத்தின் பேருவளை அளுத்கம பயாகல ஆகிய 3 பொலிஸ் பிரிவுகளுக்கு இவ்வாறு தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளது.

மேலும் தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ள பகுதிகளுக்குள் பிரவேசிப்பதை தவிர்த்து செயற்படுமாறும் கேட்டுக்கொண்டுள்ளார்.

இதனிடையே கொரோனா தடுப்பு சுகாதார வழிகாட்டல்களை மீறி செயற்படுபவர்களுக்கு எதிராக தனிமைப்படுத்தல் சட்டவிதிமுறைகளுக்கமைய நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் பிரதிப் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதிப் பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.

No comments: