சர்வதேச ரீதியில் அச்சுறுத்திக் கொண்டிருக்கும் கொரோனா வைரஸ் தொற்று


சர்வதேச ரீதியில் கொரோனா தொற்றுக்குள்ளானோரின் எண்ணிக்கை 4 கோடியே 14 இலட்சத்தைக் கடந்துள்ளது.

கொரோனா தொற்றுக்குள்ளான மேலும் 4 இலட்சத்து 33 ஆயிரத்து 988 பேர் நேற்றைய தினம் அடையாளம் காணப்பட்டுள்ள நிலையிலேயே இந்த அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது.

இதன்படி, அமெரிக்காவில் 60 ஆயிரத்து 616 பேரும், இந்தியாவில் 56 ஆயிரம் பேரும், பிரித்தானியாவில் 26 ஆயிரத்து 688 பேரும் புதிதாக கொரோனா தொற்றுக்குள்ளாகியுள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

இதனை அடுத்து, சர்வதேச ரீதியில் கொரோனா தொற்றுக்குள்ளானோரின் மொத்த எண்ணிக்கை 4 கோடியே 14 இலட்சத்து 58 ஆயிரத்து 986 ஆக அதிகரித்துள்ளது.

அத்துடன், சர்வதேச ரீதியில் கொரோனா தொற்றுக்குள்ளான 11 இலட்சத்து 35 ஆயிரத்து 638 பேர் இதுவரை உயிரிழந்துள்ளனர்.

இந்த நிலையில், சர்வதேச ரீதியில் கொரோனா தொற்றுக்குள்ளான 3 கோடியே 8 இலட்சத்து 87 ஆயிரத்து 125 பேர் இதுவரை குணமடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments: