பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கம் விடுத்துள்ள செய்தி


மினுவாங்கொடை – திவுலபிட்டிய பகுதியில் கொரோனா தொற்றுக்குள்ளானதாக அடையாளம் காணப்பட்ட பெண்ணுடன் 950 பேர் நெருங்கிய தொடர்பைப் பேணியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கம் இதனைத் தெரிவித்துள்ளது.

எனினும், குறித்த அனைவரும் தற்சமயம் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்படவில்லை என குறிப்பிடப்பட்டுள்ளது.

அத்துடன், குறித்த நபர்களை தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்த தேவையான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும், பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

இதேவேளை, குறித்த கொரோனா தொற்றுக்குள்ளான பெண்ணுடன் நெருங்கிப் பழகிய மேலும் பலரை அடையாளம் காணும் நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments: