கொரோனா தொற்றுக்குள்ளான பெண் ஆலயத்திற்கு சென்றமையினால் ஆலையத்திற்கு பூட்டு

பொகவந்தலாவ நிருபர் எஸ்.சதீஸ் 


பொகவந்தலாவ கொட்டியாகலை மத்திய பிரிவு தோட்டப்பகுதியில் கொரோனா தொற்றுக்குள்ளான பெண் பொகவந்தலாவ சிறீ தண்டாயுதபாணி ஆலயத்திற்கு சென்று வந்தமையினால் குறித்த ஆலயம் மூடப்பட்டு ஆலயத்தில் இருந்த ஆறு பேர் 14 நாட்களுக்கு தனிமைபடுத்தபட்டுள்ளதாக பொகவந்தலாவ பொது சுகாதார பரிசோதகர்கள் தெரிவித்தனர். 

இன்றைய தினம் குறித்த தோட்டப்பகுதியில் உள்ள இரண்டு பெண்களுக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டதை தொடர்ந்து அதில் ஒரு பெண் கடந்த 20ம் திகதி வழிபாட்டிற்காக பொகவந்தலாவ நகரில் உள்ள ஆலயத்திற்கு சென்று வந்துள்ளமை தெரியவந்ததை அடுத்து,குறித்த ஆலயத்தில் உள்ளவர்கள் தனிமைபடுத்தபட்டுள்ளதாகவும் 14 நாட்களுக்கு ஆலயத்தின் வழிபாடுகள் எதுவும் இடம்பெறாது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments: