ஆசிரியர்களுக்கு வடிவேல் சுரேஸ் வாழ்த்து

 நீலமேகம் பிரசாந்த்


"நாட்டின் எதிர்காலத்தை தாங்கவிருக்கும் தூண்களான மாணவர்களுக்கு அழிவில்லா ககல்விச் செல்வத்தை அளிப்பதோடு,வளமிக்க அறிவுசார் சமுதாயத்தை உருவாக்க அரும்பணியை ஆற்றிவரும் ஆசிரியர்களுக்கு  இந் நன்னாளில் உளம்கனிந்த   சர்வதேச ஆசிரியர் தின வாழ்த்துக்கள்"என இலங்கை தேசிய தோட்டத் தொழிலாளர் சங்கத்தின் பொதுச் செயலாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான வடிவேல் சுரேஷ் தனது ஆசிரியர் தின வாழ்த்துச் செய்தியை தெரிவித்துள்ளார்.

மேலும் அவ் வாழ்த்துச் செய்தியில்...

மாதா,பிதா,குரு,தெய்வம் என்று சொல்வார்கள் நம் பெற்றோர்களுக்கு அடுத்த படியாக நாம் வணங்குவது  ஆசிரியர்களைத்தான்.அந்தவகையில் ஆசிரியர் பணி என்பது தன்நலன் எதிர்பாராத பொதுப்பணி,ஒரு ஆசிரியரால் தான் மாணவனின் நம்பிக்கை மற்றும் கற்பனைதிறனை  தூண்டச் செய்து இலக்கை அடைவதற்கான முயற்சியை வழங்க முடியும்.

ஒவ்வொரு ஆசிரியரும் ஒவ்வொரு நூலகம் போன்றோர்கள்.ஆசிரியர்களின் அயராத உழைப்பும் சேவை மனப்பாங்குமே சீரான சமுதாயத்தின் வளர்ச்சிக்கு வித்திடுகின்றது என்பதில் எவ்வித ஐயப்பாடுமில்லை,

மலையக மக்களின் பிரதிநிதி என்ற வகையில் மலையக சமுதாயத்தின் கல்விக்கான தேவைப்பாடுகளையும் ஆசிரியர்களின் மகத்துவத்தையும் நன்கு அறிந்தவன் நான்.அந்தவகையிலே கடந்த காலங்களில் ஊவா தமிழ்க் கல்வி அமைச்சராக பணியாற்றிய காலப்பகுதியில்   வரலாறே வாயடைத்துப் போகும் வகையில் "ஊழியேல் எங்கும் ஊவா தமிழ் எஃகும்"எனும் தொனிப் பொருளில்  "சாகித்யவிழா"எனும் வரலாற்று விழாவை மலையக ஆசிரியப் பெருமக்களோடு இணைந்து  நிகழ்த்தியவன் என்பதில் என்றும் பெருமை கொள்பவன் வடிவேல் சுரேஷ்..

தற்போதைய நிலையில் மலையகத்தின் கல்வி வளர்ச்சி படிப்படியாக வளர்ச்சியடைந்து வருகின்றது.அந்த வகையில் பொருளாதாரத்திற்கு மாத்திரமே முதுகெழும்பாக தங்களை இத்தனை காலம் காண்பித்துக் கொண்டிருந்த எம் சொந்தங்கள் தற்போது கல்வியிலும் நாங்கள் சளைத்தவர்களல்ல என்பதை நிருபிக்கும் வகையில் ஆசிரியர்கள்,வைத்தியர்கள்,தாதியர்கள்,சட்டத்தரனிகள்,விரிவுரையாளர்கள்,பொறியியலாளர்கள் பல தரப்பட்ட கோணங்களிலும் தங்களது திறமைகளை வெளிப்படுத்திவருகின்றனர்.இவை அனைத்திற்கும் மாணவனின் கனவுகளை கைவசப்படுத்திக் கொடுக்கும் தூண்டுகோள்களான ஆசிரியர்களே காரணம் என்றால் அது மிகையாகாது.

அத்தகைய ஆசிரியர்களின் குறை,நிறைகளை கேட்டறிந்து அவர்களுக்கான தேவைகளை பூர்த்தி செய்து வழங்க வேண்டியது அரசாங்கத்தின் பாரிய பொறுப்பாகும்.அந்த வகையில் கல்விக்கும்,ஆசிரியர்களுக்கும் 24 மணி நேரமும் சேவையாற்ற நான் தயாராகவுள்ளேன்.அதே போன்று ஆசிரியர்கள் கல்வி முறையில் மட்டுமன்றி வாழ்க்கை நெறிகளிலும் சிறந்த மாணவர்களை உருவாக்குவதற்கு கடுமையாக உழைக்க வேண்டும் என கேட்டுக் கொள்வதோடு,அறிவுச் செல்வத்தை அள்ளித்தந்து அறியாமை இருளை அகற்றிடும் ஆசிரியர் சேவையை மேலும் தொடர அனைத்து ஆசிரியர்களுக்கும் என்னுடைய வாழ்த்துக்கள். என தெரிவித்தார்.

No comments: