வீதி ஒழுங்கு விதிகளை மீறும் சாரதிகளை அடையாளம் காண்பதற்கான விசேட நடவடிக்கை


வீதி ஒழுங்கு விதிகளை மீறும் சாரதிகளை அடையாளம் காண்பதற்கு விசேட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் போக்குவரத்து பிரிவு தெரிவித்துள்ளது.

விமானப்படையின் ட்ரோன் கருவிகள் மூலம் சாரதிகளை அடையாளம் காண்பதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்படவுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளது.

எதிர்வரும் 5ம் திகதி முதல் இந்த நடவடிக்கை செயற்படுத்தப்படவுள்ளதாக பொலிஸ் போக்குவரத்து பிரிவுக்கு பொறுப்பான சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் இந்திக்க ஹப்புகொட தெரிவித்துள்ளார்.

No comments: