கடுகதி இரயில்சேவைகள் சிலவற்றை இடைநிறுத்துவதற்கு நடவடிக்கை


நகரங்களுக்கு இடையிலான கடுகதி இரயில்சேவைகள் சிலவற்றை இடைநிறுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இரயில் பயணிகளின் எண்ணிக்கை மிக குறைவாக பதிவாகுவதன் காரணமாகவே இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இதன்படி, கொழும்பு – கண்டி இடையிலான கடுகதி ரயில் சேவை,  மருதான – பெலியத்த இடையிலான கடுகதி ரயில் சேவை மற்றும் கொழும்பு கோட்டை மற்றும் பொலன்நறுவைக்கிடையிலான கடுகதி ரயில் சேவை ஆகியன இவ்வாறு இடைநிறுத்தப்பட்டுள்ளதாக அறிவிக்கபட்டுள்ளது.

இதேவேளை, மேலும் சில ரயில் சேவைகளிலும் மாற்றங்களை ஏற்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் ரயில்வே திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

No comments: