எமது ஜனாதிபதி சொல்வதை செய்வார் - அமைச்சர் மஹிந்தாந்த அளுத்கமகே

 பொகவந்தலாவ நிருபர் எஸ்.சதீஸ் 


எமது ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ஸ சொல்லுவதை செய்பவர் செய்வதை சொல்லுபவர் ஆகையால் தான் ஒரு இலட்ச்சம் வேலைவாய்ப்பு வழங்குவதாக கூறினார் இன்று அதனையும் செய்து காட்டியுள்ளார் என விவசாயத்துறை அமைச்சர் மஹிந்தாநந்த அளுத்கமகே தெரிவித்துள்ளார். 

இன்று இடம்பெற்ற நிகழ்வு ஒன்றில் கலந்து கொண்டபோதே அவர் இதனை தெரிவித்தார். 

இதன் போது மேலும் கருத்து தெரிவித்த அமைச்சர் மஹிந்தாநந்த அளுத்கமகே,

எமது ஜனாதிபதி தேர்தல் காலங்களில் வழங்கப்பட்ட வாக்குறுதிகளை தற்பொழுது நிறைவேற்றி வருகிறார். 

பொது தேர்தல் நிறைவடைந்தவுடன் 20வது திருத்தத்தை அமுல்படுத்துவதாக கூறினார் அதனையும் நிறைவேற்றினார். வழங்கப்படுகின்ற வாக்குறுதிகள் அனைத்தையும் எதிர்வரும் காலங்களில் நிறைவேற்றுவார் என குறிப்பிட்டார்.No comments: