நாட்டில் நேற்றைய தினம் கொரோனா தொற்றுக்குள்ளானவர்கள் பற்றிய விபரம்


நாட்டில் நேற்றைய தினம் 121 பேருக்கு கொரோனா தொற்றுறுதியாகியுள்ளது.

வெளிநாட்டில் இருந்து வருகைத் தந்த 6 பேர் உள்ளடங்கலாக இந்த எண்ணிக்கை பதிவாகியுள்ளது.

நாட்டில் நேற்றைய தினத்தில் மாத்திரம் மினுவாங்கொடை பிரெண்டிக்ஸ் ஆடைத் தொழிற்சாலையில் 121 பேருக்கு கொரோனா தொற்றுறுதியானதாக இராணுவ தளபதி லெப்டினன் ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார். 

அவர்களில் 24 பேர் தனிமைப்படுத்தல் நிலையங்களில் அடையாளங்காணப்பட்டதுடன்,ஏனைய 91 பேரும் அவர்களுடன் தொடர்பைப் பேணியவர்கள் என் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன்படி மினுவாங்கொடை கொத்தணியில் கொரோனா தொற்றுக்குள்ளானவர்களின் மொத்த எண்ணிக்கை 2014 ஆக உயர்வடைந்துள்ளது.

இதேவேளை,கொரோனா தொற்றுக்குள்ளாகி குணமடைநதவர்களின் எண்ணிக்கை 3395 ஆக காணப்படுகிறது.

மேலும் 2067 பேர் வைத்தியசாலைகளில் தொடர்ந்து சிகிச்சைப் பெற்றுவருகின்றனர்.

No comments: