உயர்தரப்பரீட்சை நிலையங்களில் சுகாதாரப் பாதுகாப்பு மேலும் அதிகரிப்பு


உயர்தரப்பரீட்சை நிலையங்களில், சுகாதாரப் பாதுகாப்பை மேலும் அதிகரிக்க, மேலும் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக கல்வியமைச்சின் செயலாளர் பேராசிரியர் கபில பெரேரா தெரிவித்துள்ளார்.

இதன்படி, பரீட்சைக்காக பயன்படுத்தப்பட்டுள்ள பாடசாலைகளின், அபிவிருத்தி சங்கங்களுக்கு தலா 15 ஆயிரம் ரூபா வீதம் வழங்கப்படவுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

கல்வியமைச்சின் செயலாளர் மற்றும் பரீட்சை ஆனையாளர் நாயகம் ஆகியோரின் வழிகாட்டல்களின் கீழ் இந்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

பரீட்சை மண்டப மேற்பார்வையாளர்கள் உள்ளிட்ட பணியாளர்களின் பாதுகாப்புக்கு, முகக் கவசம், பாதுகாப்பான ஆடைகள் மற்றும் கிருமி நாசினி சவர்க்காரம் என்பவற்றை வழங்குவதற்காக, ஏற்கனவே நிதி வழங்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், குறித்த நிதிக்கு மேலதிகமாகவே, இந்த நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாக கல்வியமைச்சின் செயலாளர் பேராசிரியர் கபில பெரேரா சுட்டிக்காட்டியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments: