இன்று நாடு திரும்பிய இலங்கையர்கள்


கொரோனா தொற்றுப் பரவல்  காரணமாக, வெளிநாடுகளில் நிர்க்கதிக்குள்ளாகியிருந்த 425 இலங்கையர்கள் இன்றைய தினம் நாடு திரும்பியுள்ளனர்.

இதன்படி, கட்டாரில் இருந்து 142 இலங்கையர்களும்,ஐப்பானில் நிர்க்கதிக்குள்ளாகியிருந்த 283 இலங்கையர்களும் நாட்டுக்கு அழைத்து வரப்பட்டுள்ளனர்.

நாட்டுக்கு வருகை தந்த குறித்த அனைவரும் PCR பரிசோதனைகளின் பின்னர், தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments: