கொரோனா தொற்றுறுதியான காவற்துறை அதிகாரிகளின் எண்ணிக்கை


கொரோனா தொற்றுறுதியான காவற்துறை அதிகாரிகளின் எண்ணிக்கை 78 ஆக அதிகரித்துள்ளது.

அவர்களில் பொரளை காவற்துறையின் 7 அதிகாரிகளும் அடங்குகின்றனர்.

அதேநேரம் 300 காவற்துறையினர் தனிமைப்படுத்தலுக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

எனினும் தொற்றுறுதியானவர்கள் அடையாளம் காணப்பட்ட அனைத்து காவற்துறை நிலையங்களும் உரிய முறையில் தொற்று நீக்கம் செய்யப்பட்டுள்ளதால் அவற்றின் சேவைகள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்படுகின்றன.

எனவே பொதுமக்கள் அச்சமின்றி காவற்துறை நிலையங்களுக்கு பிரவேசிக்க முடியும் என காவற்துறை ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

No comments: