உள்ளுராட்சி மன்ற உறுப்பினருக்கும் சுகாதார பரிசோதகருக்கும் முறுகல் நிலை

க.கிஷாந்தன்


கொரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்துவதற்காக வர்த்தக நிலையங்களை மூடுமாறு சுகாதார பரிசோதகர்களால் சம்பந்தப்பட்ட வர்த்தக நிலையங்களின் உரிமையாளர்களுக்கு அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், மூடப்பட்டிருந்த வர்த்தக நிலையங்களை மீண்டும் திறப்பதற்கு உள்ளுராட்சிமன்ற உறுப்பினர் ஒருவர் முயற்சித்ததால் முறுகல் நிலை ஏற்பட்டது.

 

அட்டன் – டிக்கோயா நகரசபையின் நிர்வாகத்துக்குட்பட்ட டிக்கோயா நகரிலேயே இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

 

டிக்கோயா மற்றும் அளுத்கம பகுதிகளில் வீதிக்கு இருமருங்கிலும் வியாபாரம் செய்வதற்கு தற்காலிகமாக தடைவிதிப்பதற்கு பொது சுகாதார பரிசோதகர்கள் நடவடிக்கை எடுத்தவேளையிலேயே சர்ச்சை ஏற்பட்டுள்ளது. 

 

“அட்டன் நகரம் மட்டுமே தனிமைப்படுத்தப்பட்டுள்ளது, இங்கு ஊரடங்கு உத்தரவு அமுலில் இல்லை. எனவே, வர்த்தக நிலையங்களை மூடவேண்டிய தேவையில்லை” என்று பிரதேச சபை உறுப்பினர் குறிப்பிட்டுள்ளார்.

 

அட்டன் நகரில் முதலாவது கொரோனா தொற்றாளர் கடந்த 25 ஆம் திகதி அடையாளம் காணப்பட்டார். இதனையடுத்து 25 ஆம் திகதி முதலே அட்டன் நகரம் தனிமைப்படுத்தப்பட்டது. அன்று மாலை அட்டன் மற்றும் டிக்கோயா நகரங்களிலுள்ள வர்த்தக நிலையங்களை மூடுவதற்கு நடவடிக்கை எடுக்குமாறு நகரசபை தலைவரால் அறிவிறுத்தல் விடுக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

No comments: