இராணுவத்தளபதிகளுக்கான முக்கிய அறிவிப்பு


மினுவாங்கொடை மற்றும் திவுலப்பிட்டி ஆகிய பகுதிகளில் வசிக்கும் முப்படை மற்றும் சிவில் பாதுகாப்பு உத்தியோகஸ்தர்களை சேவைக்கு சமூகமளிக்க வேண்டாமென வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.

மறு அறிவித்தல் வரை குறித்த பாதுகாப்பு பிரிவினர் சேவைக்கு சமூகமளிப்பதை தவிர்க்குமாறு இராணுவத்தளபதி சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

இதேவேளை, மினுவாங்கொடை மற்றும் திவுலப்பிட்டி ஆகிய பகுதிகளில் வசிக்கும் கட்டுநாயக்க விமான நிலையத்தில் பணியாற்றும் ஊழியர்களையும் பணிக்கு சமூகமளிக்க வேண்டாமென அறிவிக்கப்பட்டுள்ளது.

No comments: