அரசு குறுந்திரைப்பட போட்டிக்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன

ஏ.எல்.எம்.ஷினாஸ்          


புத்தசாசன சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சின் வழிகாட்டலில் கலாசார அலுவல்கள் திணைக்களத்தினால் வருடாந்தம் சுமார் 15-க்கும் மேற்பட்ட அரச விழாக்கள் ஏற்பாடு செய்யப்படுகின்றன. 

அந்த வகையில் அரச சினிமா ஆலோசனைக்குழு, இலங்கை கலைக்கழகம் என்பவற்றுடன் நினைந்து கலாசார அலுவல்கள் திணைக்களத்தினால் நடத்தப்படுகின்ற அரச குறுந்திரைப்பட போட்டிக்காக கவர்ச்சிகரமான குறுந்திரைப்பட படைப்பாளிகளிடமிருந்து விண்ணப்பங்கள் கோரப்படுகின்றன.

'சம்பிரசாத'  எனும் தொனிப்பொருளில் இந்த குறுந்திரைப்பட போட்டி நடைபெறவுள்ளது. வயது வித்தியாசமின்றி அனைத்து தரப்பினரிடம் இருந்தும் விண்ணப்பங்கள் எதிர்பார்க்கப்படுகின்றன. 

எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 30 ஆம் திகதி வரை விண்ணப்பங்கள்  ஏற்றுக்கொள்ளப்படும். இதற்கான பரிசளிப்பு விழா எதிர்வரும் டிசம்பர் மாதம் 10 ஆம் திகதி நடத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது.

விண்ணப்ப படிவங்களை பிரதேச செயலகங்களில் கடமையாற்றும் கலாசார அலுவல்கள் திணைக்களத்தின் உத்தியோகத்தர் ஊடாகவும் www.culturaldep.gov.lk என்ற இணையதள முகவரியிலும் பெற்றுக்கொள்ளமுடியும்.

முதலாம் இடத்தை பெறுகின்ற சிறந்த குறுந்திரைப்படத்திற்கு ரூபா 150000.00 பணப்பரிசும் விருதும் வழங்கப்படவுள்ளது. இரண்டாம் இடத்தை பெறும் சிறந்த குறுந்திரைப்படத்திற்கு ரூபா 100000.00 மற்றும் விருது வழங்கப்படும். மூன்றாம் இடத்தை பெறும் சிறந்த குறுந்திரைப்படத்திற்கு  ரூபா 75000.00 மற்றும் விருது என்பன வழங்கப்படவுள்ளது.

இவற்றுக்கு மேலதிகமாக சிறந்த திரைக்கதை, சிறந்த நடிகர் -நடிகை, சிறந்த கமரா காட்சி. சிறந்த திரை தொகுப்பு ,என தெரிவுசெய்யப்பட்டு அவர்களுக்கும் பெறுமதியான பணப் பரிசில்களும் விருதுகளும் வழங்கப்பட உள்ளன.

No comments: