பி.சி.ஆர் பரிசோதனைகளின் அறிக்கைகள் கிடைக்கபெற்ற பிறகே வர்த்தக நிலையங்களை திறப்பது தொடர்பில் நடவடிக்கை எடுக்கப்படும்

பொகவந்தலாவ நிருபர் எஸ்.சதீஸ்                                                                                                                    

பொகவந்தலாவ கொட்டியாகலை மத்திய பிரிவு தோட்டப்பகுதியில் மூன்று பேருக்கு கொரோனா தொற்றுறுறுதி செய்யப்பட்ட நிலையில் அவர்களோடு தொடர்புகளை மேற்கொண்டிருந்த 32 பேருக்கு பி.சி.ஆர்.பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.

மேற்கொள்ளபட்ட பி. சி. ஆர் பரிசோதனையின் உத்தியோகபூர்வ அறிக்கை
கிடைக்குப்பெற்ற பிறகே பொகவந்தலாவ வர்த்தக நிலையங்களை திறப்பது தொடர்பில்
நடவடிக்கை எடுக்கப்படும் என நோர்வூட் பிரதேசசபையின் தலைவர் ரவி குழந்தைவேல் தெரிவித்துள்ளார்.

இதேவேளை பொகவந்தலாவ சிறி தண்டாயுதபாணி ஆலயத்திற்கு கொரோனா தொற்று
உறுதிப்படுத்தப்பட்ட பெண் கடந்த 20ம் திகதி குறித்த ஆலயத்திற்கு சென்றமையில்
குறித்த ஆலயம் 14 நாட்களுக்கு மூடப்பட்டுள்ளதோடு அன்றைய தினம் இரவு
பூஜைக்கு சென்றவர்கள் அனைவரும் பொதுசுகாதார காரியாலயத்திற்கு
வரவழைக்கப்பட்டு பி. சி. ஆர்.பரிசோதனையினை மேற்கொள்ள நடவடிக்கை
எடுக்கப்பட்டு வருகிறது. 

பொகவந்தலாவ நகரம்,பேருந்து தரிப்பிடம், தபால் நிலையம்,பொலிஸ் நிலையம் ஆகிய பகுதிகளுக்கு நோர்வுட் பிரதேசசபையினரால் கிருமினாசினி தெளிக்கப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.No comments: