ஜனாதிபதி ஆணைக்குழுவில் முன்னிலையானார் முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்க


முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்க உயிர்த்த ஞாயிறு தாக்குதல் குறித்து விசாரணைகளை முன்னெடுத்துவரும் ஜனாதிபதி ஆணைக்குழுவில் முன்னிலையாகி உள்ளார்.

கடந்த வருடம் ஏப்ரல் மாதம் இடம்பெற்ற உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவம் தொடர்பில் சாட்சியங்களை பதிவு செய்வதற்காக முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கு இந்த சம்பவம் குறித்து விசாரணைகளை முன்னெடுத்துவரும் ஆணைக்குழு அழைப்பு விடுத்திருந்தது.

இதற்கமைய, முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்க இன்று முன்னிலையாகி உள்ளார்.

இதேவேளை, முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் குறித்து விசாரணைகளை முன்னெடுத்துவரும் ஜனாதிபதி ஆணைக்குழு நேற்றைய தினம்  சுமார் ஏழு மணிநேரம் வாக்குமூலம் பதிவுசெய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

No comments: