இன்று நாடு திரும்பிய இலங்கையர்கள்


கொரோனா தொற்றுப் பரவல் காரணமாக வெளிநாடுகளில் தற்காலிகமாக தங்கியிருந்த  331 இலங்கையர்கள் இன்று அதிகாலை நாடு திரும்பியுள்ளனர்.

அமெரிக்காவில் தற்காலிகமாக தங்கியிருந்த  312 இலங்கையர்களும், தொழில் நிமித்தம் காரணமாக ஐக்கிய அரபு இராச்சியத்திற்கு  சென்றிருந்த 19 இலங்கையர்களும் இன்று  அதிகாலை நாடு திரும்பியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் நாடு திரும்பியுள்ள இலங்கையர்கள்  அனைவரும்  விமான நிலையத்தில் பி.சி.ஆர் பரிசோதனைகளுக்கு உட்படுத்தப்பட்டதுடன் தனிமைப்படுத்தல் செயற்பாடுகளுக்கென  தனிமைப்படுத்தல் நிலையங்களுக்கு அனுப்பிவைக்கப்பட்டதாகவும்  தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments: