வரவு செலவு திட்ட விவாதத்தை மட்டுப்படுத்துவதற்கு நடவடிக்கை


கொரோனா தொற்று அச்சநிலைமை காரணமாக வரவு செலவு திட்ட விவாதத்தை மட்டுப்படுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

2020ம் ஆண்டுக்கான இடைக்கால வரவு செலவு திட்டம் நவம்பர் மாதம் நாடாளுமன்றில் சமர்ப்பிக்கப்படவுள்ளது.

மேலும், 2020 நிதியாண்டிற்கான இரண்டு இடைக்கால கணக்கறிக்கையினை சமர்ப்பிப்பதற்பு அமைச்சரவை அனுமதி அளித்துள்ளது.

இதேவேளை, அடுத்த வருடத்திற்கான அரசாங்கத்தின் நாளாந்த செலவு 2 ஆயிரத்து, 690 பில்லியன் ரூபாவாகவும் மூலதன செலவு ஆயிரத்து 146 பில்லியன் ரூபாவாகும் எனவும் மதிப்பிடப்பட்டுள்ளது.

குறித்த  செலவு மதிப்பீடுகள் மற்றும் கடன் விதிமுறைகளை உள்ளடக்கிய நிதி ஒதுக்கீட்டு சட்டமூலம் நாடாளுமன்றில் சமர்பிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments: